வங்கிகளுக்கு அளிக்கும் நிதியின் மீதான வட்டி விகிதம், ரீப்போ மற்றும் ரிவர்ஸ் ரீப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) ஆளுநர் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்!
2007-08 நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை குறித்த முதல் காலாண்டின் நிலவரத்தை மும்பையில் இன்று வெளியிட்ட இந்திய மைய வங்கி ஆளுநர் வேணுகோபால் ரெட்டி, வங்கிகள் மைய வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதாச்சாரத்தை 50 அடிப்படைகள் புள்ளிகள் உயர்த்தி 7 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகவும், அது ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி இந்த நிதியாண்டில் 8.5 விழுக்காடாக இருக்கும் என்றும், பண வீக்கத்தை 4 முதல் 4.5 விழுக்காடு அளவிற்கு நிலை நிறுத்த செயல்பட்டு வருவதாகக் கூறினார். (ஏ.என்.ஐ.)
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment