Monday, July 16, 2007

மீசை வைத்த தமிழ்

தேசப்பற்று உடையவர்கள் தமிழ்ப்பற்றை விடவேண்டும். தமிழ்ப்பற்று கொண்டவர்கள் தேசப்பற்றோடு இருக்கக் கூடாது என்பது போன்றநிலை தமிழ்நாட்டில் இருந்தது உண்டு. பரவலாக இவ்வாறு நினைக்கப்பட்ட நிலை சரியானது அல்ல. நாமக்கல் கவிஞர் போன்றவர்கள்தேசப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் ஒருசேரப் பெற்ற மேலோர்கள். மகாகவி பாரதியார் போட்ட அந்த ராஜபாட்டையில் நடைபோட்டவர்கள்ஏராளம்.

பாருக்குள்ளே நல்ல நாடு � எங்கள்
பாரதநாடு
என்று பாடிய நாட்டுப்பற்று மணக்கும் திருவாய்தான்,
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே � அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
என்று தமிழ்ப்பற்றையும் பாடிக் காட்டியது.

இந்த இனியநிலை, பிற்காலத்தில் ஏனோ தமிழ்ப்பற்றையும் நாட்டுப்பற்றையும் பிரித்துப் பார்க்கும்படி வைத்தது. ஆனால் நல்வாய்ப்பாகஅந்நிலை இன்றில்லை. இனி இருக்காது.

தேசப்பற்றும் தமிழ்ப்பற்றும் ஒன்றுக்கொன்று முரணல்ல இரண்டும் சேர்ந்திருப்பதே ஆரோக்கிய மானது என்பதைக் காட்டும் நல்ல மனிதராகத்திகழ்ந்தவர்தான் ம.பொ.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்கள் ஆவார்கள்.

வெள்ளையனை எதிர்த்துப் போராடி சிறை சென்றார். பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்திருந்துபோராட்ட வீரராகத் திகழ்ந்தார்.

சிலம்புச் செல்வர் என்று எல்லோரும் பாராட்டும் வண்ணம் சிலப்பதிகாரத்தை எடுத்து விளக்கி அதனை மக்கள் காப்பியமாக ஆக்கிக்காட்டினார்.

தேசப்பற்றும் தமிழார்வமும் நிறைந்த ம.பொ.சி. அவர்கள் தமிழர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்என்றால் அது மிகையன்று.

எளிய மனிதர்

தமிழகம் அவரைச் சிலம்புச் செல்வர் என்று போற்றியது. அவர் மேடையில் பேசினால், வெண்கலம் ஒலிப்பது போன்று கணீர் என்று ஒலிக்கும்.பேச்சில் நயமிருக்கும். குத்தல், கிண்டல் எல்லாம் இருக்கும். அவர் பேச்சைக் கேட்டு ரசிப்பதற்கென்று எல்லா ஊர்களிலும் அன்பர்கள் உண்டு.அவருடைய முகத்துக்கு அந்த மீசை மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் மீசை தனித்தன்மை வாய்ந்தது. ராஜாஜிக்கு நெருங்கிய நண்பர்.இவ்வளவு சிறப்புகள் இருந்தபோதிலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய எளிமை எல்லோரையும் கவரும் தன்மைஉடையது.

எளிமையான நான்கு முழக் கதர்வேட்டி, முழுக்கைக் கதர்ச்சட்டை, மேலே வெண்மையாக ஒரு கதர்த்துண்டு. இதுவே அவருடைய தோற்றம்.மெலிந்த உருவம். பேச்சு மட்டும்தான் கனமான அழுத்தந்திருத்தமான குரலில் தெளிவாக இருக்கும்.

இலக்கியக் கூட்டங்களில் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம், சங்க இலக்கியம் என்று அனைத்து இலக்கியங்களிலும் ஆராய்ச்சியோடுகூடிய பேச்சைப் பேசுவார்.

அவருடைய பேச்சில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. எதிர்க்கருத்துக் கொண்டவர்களும் அவர் பேச்சில் மயங்குவார்கள். அப்படிப்பட்டஇனிய பேச்சு அவர்களின் பேச்சு.

அவருடைய 'பாணி' என்று தனித்துக் குறிப்பிடும் வகையில் ம.பொ.சி.யின் பேச்சு அமைந்திருந்தது. திருக்குறள், பாரதி கவிதைகள், சிலப்பதிகாரம்இவை அவருடைய பேச்சின் ஆதார சுருதிகள். பாரதியை அவர் காட்டி விளக்கும் விதமே தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

அவர் காலத்து நிலை

அவர் கால இலக்கிய மேடைகள் எவ்வாறு இருந்தன? ஒருபுறம் கி.வா.ஜ., தெ.பொ.மீ., போன்ற ஆன்ற விந்தடங்கிய இலக்கியச் செல்வர்களின்சொற்பொழிவுகள் .

இன்னொருபுறம் திராவிட இலக்கியச் சொற் பொழிவாளர்களாக அண்ணா, நெடுஞ்செழியன், பாரதிதாசன் போன்றவர்கள் இடி முழக்கமாகப.ஜீவானந்தம் இன்னொரு முனையில், முழு இலக்கியவாதிகள் ஒருபுறம். அரசியலும் இலக்கியமும் சமுதாய சீர்திருத்த எண்ணமும் கொண்டபேச்சாளர்கள் இன்னொருபுறம் என்று இருந்து ஆங்காங்கு தீவிரமாக சொல்மாரிகள்.

அந்தக் கால கட்டத்தில் ம.பொ.சி. அவர்கள் தேசியமும், தமிழ் உணர்வும் கொண்டு இலக்கிய விமர்சனம் செய்து கொண்டிருந்தார். ம.பொ.சி.யின்பேச்சு வலிமை உடையதாகக் கருத்தாலும் சொல்லாட்சியாலும் அமைந்திருக்கும். அவர் ஒன்றைச் சொன்னால், அதைத் தமிழ்நாடு பரபரப்புடன்செவிமடுக்கும். உடனே அதற்கு எதிர்ப்புகள், கண்டனக் கணைகள் என அது ஒருபுறம் பறக்கும். அவருடைய எதிர்ப்பாளர்களும் கூட பேச்சைக்கேட்க வந்து கூடுவர். அவ்வாறான கவர்ச்சி மிகுந்தது அவர் பேச்சு.


கம்பீரம் மிகுந்த குரலில் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அவர் பேசுவது, கேட்க இனிய சங்கீதமாகச் சுவைதரும்.

அவர் காலத்தில் வாழ்ந்த சிறந்த பேச்சாளர்கள் இடையே அவர் புகழ்பெற்றவராகத் திகழ்ந்தார்.

சுதந்திரச் சிந்தனை

காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார். காந்தியச் சிந்தனையில் முழுவதுமாக ஈடுபாடு கொண்டிருந்தார். போராட்டத்தில் கலந்து சிறை சென்றார்.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்திருக்கிறார். தொழிற்சங்கப் பணிகளில் வி.வி.கிரி, ப.ஜீவானந்தம் போன்றவர் �களோடுஇணைந்து போராடியிருக்கிறார்.

இவைகள் அனைத்திற்கும் மேலாக அவரிடம் தமிழ், தமிழ்நாடு, தமிழர் என்ற சிந்தனை உயிரோட்டமாக இருந்து வந்தது. அதனால் அவர் ஒருதனித்தன்மையுடன் விளங்கினார். அதன் காரணமாக லாலா லஜபதிராயைப் பற்றி வானளாவப் புகழ்வது நியாயம்தான். ஆனால் அவருக்குச்சமமாகப் பணியாற்றித் தியாகம் புரிந்த வ.உ.சி.யை ஒதுக்குவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஜான்சி ராணியைப் போற்றுவது சரிதான். ஆனால்,வீரபாண்டிய கட்டபொம்மனை மறந்துவிடுவது சரியா?

தாகூர் மகாகவிதான் சரி, பாரதியார்? இவ்வாறாக இவர் சிந்தனை தனிப்பாதையில் சென்றது. இது காங்கிரஸ் இயக்கத்தினருக்குப் பிடிக்கவில்லைபோலும்! 1946ல் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 8�8�1954ல், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். ஆயினும் ம.பொ.சி.அவர்கள் தன்னுடைய காந்திய இயல்பையோ வேறு எதனையுமோ மாற்றிக் கொள்ளவில்லை.

போராட்டங்கள்

தமிழ் மற்றும் தமிழர் நலங்காக்க அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராட்டம்.

திருவேங்கடத்தைத் தமிழ்நாட்டில் சேர்க்கப் போராட்டம். அது முடியாததால் திருத்தணிவரை தமிழ்நாடு எல்லை கண்டது.

'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று ஆகவேண்டும் என்பதற்காகப் போராட்டம்.

மாநில சுயாட்சிப் போராட்டம்.

நாட்டு விடுதலைப் போராட்டம்.

குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாக்கப் போராட்டம்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றைத் தமிழ் நாட்டோடு இணைக்கும் போராட்டம். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். அதற்கு அவர் பெரும் போராட்டம்நிகழ்த்தினார்.

இவ்வாறாக அவர் வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.



தமிழுணர்வின் அடையாளம்

தமிழ் மீது உண்மையான பற்றுக் கொண்டிருந்தவர் சிலம்புச் செல்வர். மொழிப்பற்று இனப்பற்றாகவும் நாட்டுப்பற்றாகவும் மலர்ந்திருந்தது. அவர்மொழியிலேயே சொல்வதானால்,

உரிமைக்கு எல்லை வேங்கடம்;

உறவுக்கு எல்லை இமயம்;

நட்புக்கு எல்லை உலகம்;

இவ்வாறாக அவர் அரசியல் களத்தில் ஊன்றி வளர்ந்தவரே. ஆனாலும் அவருடைய உள்ளம் தமிழிலும் தமிழ் இலக்கியத்திலும் ஊறிவளர்ந்தது.

அவருடைய பெரு முயற்சியால் சிலப்பதிகாரம் எல்லார் நெஞ்சிலும் நடமாட ஆரம்பித்தது. பாரதி பாடல்களை உணர்வோடு மேடைகளில்எடுத்து மொழிந்து உணர்வூட்டினார். திருக்குறள் புதுப் பொலிவோடு அவர் நாவில் நடமாடியது.

கட்டபொம்மனைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் அச்சிலம்புச் செல்வரே ஆவார். அவர் இல்லையென்றால் அந்த வீரமிக்க சுதந்திரப்போர் அடையாளம் தெரியாமலே போயிருக்கும். அவரால்தான் கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட வரலாறு வீரகாவியமாகவெளி வந்தது. நாடகம் நடத்தினார் நடிகர் திலகம். பின்னர் அது திரைப்படமாக வந்து காவியமாக நிலைத்து உள்ளது.

அதுபோன்றே வ.உ.சிதம்பரம் பிள்ளை வரலாற்றை வெளிஉலகம் அறியுமாறு வெளிப்படுத்தியவர் சிலம்புச் செல்வரே. அதுவும் திரைப் படமாகிஒரு காவியமாகவே தமிழரின் சொத்தாகி உள்ளது. காரணம் சிலம்புச் செல்வரே.

இவ்விரு வரலாறுகளையும் நூலாக்கித் தந்துள்ளார்.

தமிழ் நாட்டின் எல்லை காக்கப் போராடியதும் தமிழர்கள் விடுதலைப் போரில் காட்டிய தீரத்தைக் காட்டியதும் அந்த தேசப்பற்றுமிக்க தமிழ்நெஞ்சினரின் அருஞ்சாதனைகள் என்றே கூறலாம்.

யார் இந்த ம.பொ.சி?

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்றபகுதியில் 26�6�1906ல் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். மூன்றாம் வகுப்போடு முடிந்தது பள்ளிப்படிப்பு. குழந்தைத் தொழிலாளியாகநெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். திருமணம் 31 ஆம்வயதில். ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைச் செல்வங்கள். பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ்இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற் பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்ட வேகத்தை முடுக்குவதில் ம.பொ.சி. பெரும்பங்கு வகித்தார். எழுநூறுநாட்களுக்கு மேல் சிறைவாசம். தீமையையும் நன்மையாக்கிக் கொள்ளும் மந்திரம் கற்றிருந்த ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக்கற்றுக்கொள்ளப் பயன் படுத்தினார். மூன்றாம் வகுப்புவரை படித்திருந்த அவர் சிலப்பதிகாரத்தைத் தானே முயன்று கற்பதற்கு என்னபாடுபட்டிருக்க வேண்டும்? விடாமுயற்சியும் ஊக்கமும் அவரைச் சிலம்புச் செல்வராக்கின. ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராதவயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வாட்டி வதைத்தது.


அவர் பெற்ற சிறப்புகள்

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் அவர் உண்மையாகப் பாடுபட்டதன் பலன் அவருக்குப் பல்வேறு சிறப்புகளைத் தந்தன.

'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.

சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவர் பதவியில் அமர்ந்து அரும்பணியாற்றினார்.

'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலை எழுதினார். அந்நூலுக்கு சாகித்திய அக்காடமி விருது பெற்றார்.

பல்வேறு துறைகளில் 150 நூல்கள் இயற்றினார்.

'எனது போராட்டம்' என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதியுள்ளார்.

'சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.

சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன.

மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.

மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.

இவ்வாறான பல்வேறு சிறப்புகள் அவரை வந்தடைந்தன. எல்லாச் சிறப்புகளுக்கும் அவர் தகுதியுடையவராகவே திகழ்ந்தார்.

பண்பாட்டுச் செல்வர்

தமிழைப் பயின்றார். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றார். சொற்பொழிவுத் துறையில் ஒரு சாதனையாளராகவே இருந்தார். அரசியலில்செல்வாக்கோடு வாழ்ந்தார். ஒருமுறை மேலவைத் துணைத்தலைவர் பொறுப்பிலும் பயன்மிகு பணியாற்றினார்.

இவ்வளவு மேன்மைகள் கொண்டு அவர் திகழ்ந்தபோதிலும் அவரிடமிருந்த எளிமை ஒரு போதும் அகன்றதில்லை.

கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் யாரையும் அவர் கண்ணியக் குறைவாகப் பேசியதோ எழுதியதோ இல்லை.

அவரைக் காணச் செல்வோரிடம் மரியாதையோடும் மதிப்போடும் பழகுவார். எளிய அவர் வீட்டில் யார் வந்தாலும் அமரவைத்து அன்பொழுகப்பேசுவார். எளிமையும் இனிமையும் நிறைந்த மனிதராகவே அவர் கடைசிவரை வாழ்ந்து வந்தார்.

திருவண்ணாமலையில்

சிலம்புச் செல்வர் மேலவைத் தலைவராக இருந்து வந்த காலம். திருவண்ணாமலையில் இறை பணி மன்றம் என்ற அமைப்பில் கோயிலில் ஒருஆன்மீகக் கூட்டம். அதில் சிலம்புச் செல்வர் அவர்களும் நானும் பேசினோம்.

நான் பேசும்போது நம் சமயத்தின் பொறுப்பைக் குறித்துப் பேசினேன். அப்போது நாகைப் பகுதியில் புயல் வீசிச் சேதம் அதிகமாகி இருந்தநேரம். நான் அதனை என் பேச்சில் குறிப்பிட்டு அங்கு மக்கள் சொல்லமுடியாத துன்பத்தில் உழல்கிறார்கள். மக்களின் இன்ப துன்பங்களில்பங்கு கொள்வது சமயத்தலைவர்கள் பொறுப்பல்லவா? பிற சமயத் தலைவர்கள் அங்கே சென்று நிற்கிறார்கள். நம் மடத்தின் தலைவர்கள்அங்கே போகவில்லையே ஏன்? என்று பேசினேன்.

என்னை அடுத்துப் பேசிய சிலம்புச் செல்வர் அவர்கள் அதனை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு எழுச்சியோடு பேசினார். மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அத்தனை பேரும் சிலம்புச் செல்வரின் அப்பேச்சு கேட்டு அவரவர் கையிலிருந்த பணத்தை எல்லாம் கொண்டுவந்துசிலம்புச் செல்வர் முன் கொட்டினார்கள். பல ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.

சிங்கப்பூரில் சுபாஷ் சந்திரபோஸ் பேசிய போது வந்திருந்த மக்கள் தங்கள் நகைகளை எல்லாம் கழற்றித் தந்ததாக படித்திருக்கிறேன். அதுபோன்ற நிகழ்ச்சியாக அது அமைந்தது. அந்தத் தொகையை மறுநாளே ஆளுநரிடம் அவர் அளித்தார்.

அவர் பேச்சு, அப்படி ஒரு ஆவேசத்தை உண்டாக்கும் பேச்சு. கோயிலிலிருந்து பணம் தரப் பட்டது. புயலில் தவித்த மக்களுக்கு, சமயம்உதவுகிறது என்ற நிலையை அங்கே அவர் உண்டாக்கி வைத்த

No comments: