Monday, 16 July , 2007, 12:16 புதுதில்லி
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தம் பதவிக் காலம் முடிந்த பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு இசைந்துள்ளார். இதனை அந்தப் பல்கலையின் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஸ்வநாதன் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கடந்த வாரம் சந்தித்துப் பேசினேன். அப்போது ஜனாதிபதி பதவிகாலம் முடிந்த உடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கல்விப் பணி மேல் அவர் கொண்டுள்ள அளவில்லா ஆவலால் அவர் இதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் எப்போது அவர் இங்கு இந்தப் பணியைத் தொடங்குவார் என்று தெரியவில்லை. அவர் இங்கு வரும் போது தங்குவதற்காக விருந்தினர் மாளிகையையும் தயாராக வைத்துள்ளோம். நானோ தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ஏரோநாட்டிகல் போன்ற என்ஜினீயரிங் பாடங்களை அவர் மாணவர்களுக்கு நடத்த இருக்கிறார்.
இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
கலாம் ஏற்கெனவே இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் 2001 நவம்பர் முதல் 2002 ஜூன் வரை தொழில்நுட்பப் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, July 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment