உயிர்ம அளவைகளுடன் (பயோமெட்ரிக்ஸ்) கூடிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட பயோமெட்ரிக் பான் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டெல்லியில் முதன்மை வருமான வரி ஆணையர்களின் தேசிய மாநாட்டைத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்துவோருக்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைகளில், விரல்ரேகை மற்றும் விழித்திரை அடிப்படையிலான பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்தும் முறைதான் பயோமெட்ரிக் பான் அட்டையாகும்.
விரல் ரேகைப் போன்றே நமது விழித்திரைகளும் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாக இருக்கும். எனவே இதனை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு முறைகள் பயோமெட்ரிக்ஸ் எனப்படுகின்றன.
போலி அட்டைகள் புழக்கத்தைக் கண்டுபிடிக்கவும், தடுக்கவும் பயோமெட்ரிக் பான் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மொத்தமுள்ள 13 லட்சம் போலி பான் அட்டைகளில் இதுவரை 11 லட்சம் போலி பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த பணி முடிந்ததும் பின்னர் வழங்கப்படும் அனைத்து பான் அட்டைகளும் பயோமெட்ரிக் அட்டைகளாகவே இருக்கும் என்றும் சிதம்பரம் கூறினார்.
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment