தக்காளி ரசம :
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
மிளகு, சீரகம் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
தனியா 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 2
தக்காளி 4
உப்பு தேவையான அளவு
புளி நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை
கொஞ்சம்
செய்முறை
துவரம் பருப்பை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், தனியா முதலியவற்றை மிக்ஸியில் நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
புளியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த புளி தண்ணீரில், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் மிளகு சீரக பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, தக்காளி குழைந்ததும் வெந்த பருப்பை மசித்து, தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
பருப்பு தண்ணீர் விட்டு, நுரை வந்தவுடன் இறக்கி கடுகு, மிளகாய் தாளிக்கவும்.
சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
பூண்டு ரசம் :
தேவையான பொருட்கள்
பூண்டு 6 பல்
புளி எலுமிச்சம்பழ அளவு
மிளகு, சீரகம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
கடுகு 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை
கொஞ்சம்
செய்முறை
புளியை 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சள் பொடி போடவும்.
மிளகு, சீரகம், பூண்டு 4 பல், கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவைகளை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள 2 பல் பூண்டை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி தண்ணீரில் போடவும்.
பூண்டு சேர்த்த புளி தண்ணீரில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் இறக்கி, கடுகை தாளிக்கவும்.
மிளகு, சீரக ரசம் :
தேவையான பொருட்கள்
புளி
எலுமிச்சங்காய் அளவு
துவரம் பருப்பு
1 டீஸ்பூன்
மிளகு
1/2 டீஸ்பூன்
சீரகம்
1/2 டீஸ்பூன்
கடுகு
1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொஞ்சம்
உப்பு
கொஞ்சம்
செய்முறை
புளியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், துவரம் பருப்பு முதலியவைகளை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும்.
புளி தண்ணீரில் உப்பு, அரைத்த தூள் முதலியவை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
கடுகு, சிறிது சீரகம் தாளித்து, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
மிளகு சீரக ரசம் தயார்.
புதினா ரசம் :
Pudhina Rasam
தேவையான பொருட்கள்:
கழுவி நறுக்கிய புதினா-1 கட்டு
மிளகு, சீரகம், ரசப்பொடி-தலா 2 டீஸ்பூன்
தனியா-1 மேஜைக் கரண்டி
துவரம் பருப்பு-1 மேஜைக்கரண்டி
புளி-ஒரு எலுமிச்சை அளவு
கீறிய பச்சை மிளகாய்-2
வெந்த துவரம் பருப்பு-1/2 கப்
நெய்-1 டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
மிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியா முதலியவைகளை வெறும் சட்டியில் வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும்.
புளிக்கரைசலில் உப்பு, ரசப்பொடி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வறுத்து பொடித்தப் பொடி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
வெந்த துவரம் பருப்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். பொங்கி, நுரைத்து வரும் போது, கீழே இறக்கி வைத்து நெய்யில், கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.
Tuesday, July 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment