Sunday, July 15, 2007

இட்லி உசிலி

இட்லி உசிலி செய்ய தேவையான பொருட்கள் :

வழக்கமான இட்லி 4
வெங்காயம் 2
து.பருப்பு 1/2 கப்
க.பருப்பு 1/2 கப்
ப.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, கறிவேப்பிலை தேவையான அளவு
மிளகாய் 2
முந்திரி பருப்பு 4
எண்ணெய் 1/2 கரண்டி
கடுகு 1/2 டீஸ்பூன்
உ.பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து உப்பும், மிளகாயும் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஆவியில் வைத்து பருப்பு உசிலிக்குச் செய்வது போல வேக வைத்து எடுத்துக் கெள்ளவும். வாணெலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உ.பருப்பு தாளித்து வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி அதில் போட்டு இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கி பருப்பையும் போட்டுப் பொல பொலவென்று வரும் வரையில் நன்றாக வதக்கவும்.

இட்லியைக் கையால் ஒரு அகல பாத்தித்தில் உதிர்த்துக் கொண்டு அதை பருப்புகளுடன் கொட்டிக் கலந்து அடுப்பிலேயே வைத்து கிளவும்.

நன்றாக கலந்து பொல பொலவென்று ஆனதும் இறக்கி வைத்து முந்திரி பருப்பை வறுத்துப் போட்டு பரிமாறவும்.

No comments: