செவ்வாய், 3 ஜூலை 2007( 12:54 IST ) Webdunia
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 7-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான டேனிலாவுடன் மோதினார்.
இதில் செரீனா 6-2, 6-7 (2-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். 2-வது செட்டில் மட்டும் டேனிலா சிறப்பாக விளையாடி செட்டைக் கைப்பற்றினார்.
செரீனா வில்லியம்ஸ் காலிறுதியில் முதல் நிலை வீராங்கனையும், பெல்ஜியத்தை சேர்ந்தவருமான ஹெனினை எதிர்கொள்கிறார். அவர் 4-வது சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஷைண்டரை தோற்கடித்தார்.
Tuesday, July 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment