Tuesday, July 31, 2007

ரூபாயின் பணவீக்கம் தொடர்ந்து 4.27 விழுக்காடு!

 ரூபாயின் பணவீக்க விகிதம் ஜூலை 7 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்திலும், அதற்கு முந்தைய வாரத்தில் இருந்த 4.27 விழுக்காடாகவே தொடர்கிறது!

7 வாரமாக தொடர்ந்து 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே நீடிக்கும் ரூபாயின் பணவீக்க விகிதம், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 4.83 விழுக்காடாக இருந்தது.

கச்சா எண்ணெய், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும் அதற்கு ஈடாக விலைகளை உயர்த்தாமல் மானியத்தை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளது விலைவாசியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அரசு முயற்சித்து வருவதையே காட்டுகிறது.

ஜூலை 7 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் மொத்த விலைக் குறியீடு 0.5 விழுக்காடு உயர்ந்து 212.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறியீடு 0.3 விழுக்காடு குறைந்து 220.6 புள்ளிகளாக ஆகியுள்ளது. (யு.என்.ஐ.)

No comments: