செவ்வாய், 3 ஜூலை 2007( 10:38 IST ) Webdunia
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டியது.
தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9014 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினடிக்கு 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலுக்கு பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கன அடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு நேற்று காலை நிலவரப்படி 9 ஆயிரம் கன அடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நீர் இன்று இரவோ அல்லது நாளை காலையோ மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததை தொடர்ந்து 73 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டி உள்ளது.
Tuesday, July 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment