Sunday, July 15, 2007

ஃப்ரைட் சப்பாத்தி

ஃப்ரைட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

சப்பாத்தி 6
கேரட், கோஸ், காலிபிளவர், பீட்ரூட், நூல்கோல் எல்லாம் துருவியது
1 கப்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 4
பூண்டு 4 பல்
இஞ்சி சிறிது
சக்கரை 1 மேஜைக்கரண்டி
லெமன் 1 (சிறிது)
தாளிப்பதற்கு
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1 தேக்கரண்டி
சீரகம் கொஞ்சம்
உ.பருப்பு கொஞ்சம்
பெருங்காயம், கொப்பரை 1/4 மூடி துருவியது.


செய்முறை:

சப்பாத்தியை இரவில் செய்து டப்பாவில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைத்து விட வேண்டும். காலையில் கைகளில் வைத்து கசக்கினால் தூளாகி விடும். எண்ணெய்ச் சட்டியில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வெடித்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். துருவிய எல்லா காய்களையும் போட்டு 3 நிமிடம் வதக்கவும். தூளாக்கிய சப்பாத்தியையும் போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கின கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலை, லெமன் ஜுஸ், சக்கரை, துருவிய காய்ந்த தேங்காய் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

No comments: