Sunday, July 22, 2007

மைக்ரோவேவ் மைசூர் பாக்

 மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்து பாருங்களேன்

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 300 கிராம்

நெய் - 300 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

தண்ணீர் - 200 மிலி

முந்திரிப் பருப்பு - 50 கிராம்

பேக்கிங் சோடா - வேண்டுமென்றால் 1 சிட்டிகை


செய்முறை

1. கடலை மாவையும், பேக்கிங் சோடாவையும் நன்கு சலித்தெடுத்துக் கொண்டு அதை நெய்யை உருக்கிக் கொண்டு அதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

2. சர்க்கரைப் பாகை இரண்டு கம்பி பாகு பதத்திற்குச் செய்து அதை சிறிது சிறிதாக கடலைமாவில் விட்டு திக்கான பேஸ்ட் போன்ற கலவையாக்கவும்.

3. பின் சிறு சிறு மைக்ரோவேவ் ( ஐஸ் கியூப் ) பாத்திரத்தில் நெய் தடவி கடலை மாவு கலவையால் நிரப்பவும்.

4. 1½ நிமிடத்திற்கு சாதாரண நார்மலான பவரில் ( மின்சாரத்தில் ) பேக் செய்யவும்.

5. பேக் செய்து முடித்தவுடன் அதை 4 அல்லது 5 நிமிடத்திற்கு ஆற விடவும். பின் அதை பாத்திரத்திலிருந்து எடுத்து வைக்கவும்.

6. ஒரு பெரிய பாத்திரத்தில் திரும்பவும் அந்த மைசூர் பாக்குகளை வைத்து 1/2 நிமிடத்திற்கு பேக் பண்ணினால், சூடான, சுவையான மைசூர் பாக் தயார்.


No comments: