Sunday, July 22, 2007

Ore Thamashu Po

சர்தார்ஜியின் ஷாக்ஸ்
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
சர்தார்ஜியின் ஷாக்ஸ்
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.



சர்தார்ஜியின் மனைவி
ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்


ஒரு ரயில் விபத்தும்
சர்தார்ஜியும்நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.


சர்தார்ஜியும் சீன நண்பரும்
சர்தார்ஜி ஒரு முறை அவருடைய சீன நண்பரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். சீன நண்பர் சர்தார்ஜியிடம் “சிங் சங் சும் சாம் சிங்” என்று சொல்லி இறந்துவிட்டார். சர்தார்ஜிக்கு சீன மொழி தெரியாது என்பதால், சீன நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார். நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் சர்தார்ஜி அதிர்ச்சி அடைந்தார். அதன் அர்த்தம் இது தான். “டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு


ஒரு சர்தாஜி ரயிலிலிருந்து தண்ணீர் பிடிக்க இற்ங்கினார். சில நிமிடங்களில் ரயில் கூவிவிட்டது. டக்குன்னு தான் வந்த ரயில் இது தானா என கூட யோசிக்காமல் பெட்டியில் ஏறிவிட்டார். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, பர்த்தில் ஏறி படுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து கீழ் பர்த்திலிருந்த்வரிடம், அவர் எங்கு போகிறார் என விசாரித்தார்.அவர் சொன்ன ஊரின் பேரைக் கேட்டவுடன், சர்தாஜி மெய்சிலிர்த்துப் போய், ஆஹா என்னமா நமது ரயில்வே துறை வேலை செய்யுது. நான் போற டில்லி வண்டிலேயெ மேல் பர்த் டெல்லிக்கும், கீழ் பர்த்து மெட்றாஸுக்கும் போகிற வண்டி உட்ருக்காங்கன்னுட்டு தூங்க ஆரம்பித்து விட்டாராம்.



சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்கச் சென்றார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டார். "பையன் பெட்டி சாவியை விழுங்கி விட்டான்! அதை நீங்க தான் எடுக்க வேண்டும்!" என்றார் சர்தார். டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். லைட்டெல்லாம் அடித்துப் பார்த்தார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். "என்னது மூன்று மாசமா?, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?" என்று டாக்டர் கோபமாகக் கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன் என்றார் சர்தார்ஜி கூலாக.


ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜிபக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.


சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!


ஒரு சர்தார்ஜிக்கு இடக்கை துண்டாகி விட்டது.ஒரே கையோடு போய்க் கொண்டிருந்தார்.அவரைப்பார்த்த அவர் நண்பர் "என்ன பல்பீர்?எப்படி இப்படி ஆச்சு? என்று கேட்டார்."பேக்டரியில் வேலை செய்தபோது மிஷின் கையை வெட்டி விட்டது" என்றார் பல்பீர். "நல்லவேளை.இடக்கை போனது.வலக்கை போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய்!" என்றார் அந்த நண்பர் "வலக்கை தான் துண்டாக இருந்தது. நான் கடைசி நிமிடத்தில் மிஷின் இறங்குவதை கவனித்து வலக்கையை எடுத்து விட்டு இடது கையை வைத்தேன்." என பெருமையுடன் சொன்னார் பல்பீர்!!!

No comments: