Sunday, July 22, 2007

சிரி அதுதான் சரி

ஓடவே முடியலை டாக்டர்...

''சாப்பிட்ட உடனே ஓடவே முடியலை டாக்டர்...

''''சாப்பிட்ட உடனே எதுக்கு ஓடறீங்க?''''ஓட்டல் முதலாளி துரத்திட்டு வர்றாரே


என்னோட காதல்தான் பெரிசு!

'''உனக்காக எங்க அப்பா - அம்மாவை விட்டுட்டு ஓடி வந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!'''

'கிடையவே கிடையாது! உங்களுக்காக என் கணவனையே விட்டுட்டு ஓடிவந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!''


''சர்தார்ஜி நர்ஸைக் காதலிக்கிறாராம்

.''''சர்தார்ஜி நர்ஸைக் காதலிக்கிறாராம்.

''''அப்புறம் ஏன் நர்ஸ் கோபமா இருக்காங்க?

''''ஐ லவ் யூ சிஸ்டர்னு சொல்லிட்டாராம்!''


சந்திரமுகி

ரஜினியோட சந்திரமுகி படத்தைப் பார்த்தியா?

ரஜினியோட பார்க்கல, தனியாத் தான் பார்த்தேன்.? ? ? ?


அட்வைஸ்!

"இப்டி ஊதாரித்தனமா செலவு செய்யாதடா மச்சி, நாளைக்குன்னு ஏதாவது சேமிச்சு வக்க வேண்டாமா?"

"என்ன திடீர்னு அட்வைஸ் பண்ற?"

"பின்ன என்ன நான் ஒரு வாரமா உங்கிட்ட 1000 ரூபா கடன் கேக்கறேன் எப்ப கேட்டாலும் காசில்ல, காசில்லன்னே சொல்லிட்டிருக்கியே"


திருமணம்!

காதலி : நீ என்னை விட 1 வயது சிறியவன்.

காதலன் : அதனால் என்ன? நான் உன்னை ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன்.


வீடு!

காதலன் : இன்று மாலை எங்க வீட்டுக்கு வா. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க!

காதலியும் வீட்டுக்கு போனாள். காதலன் சொன்னது போல் வீட்டில் யாருமே இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது.


பாம்!

இரண்டு சர்தார்ஜி பயங்கரவாதிகள்.

சர்தார் 1 : "நாம கட்டடத்துக்கு பாம் வைக்க கார்ல போறோம், சப்போஸ் குண்டு கார்லயே வெடிச்சுடுச்சுதுன்னா?"

சர்தார் 2 : "கவலையே படாத அதுக்குதான் நான் ஸ்பேர் பாம் ஒண்ணு வச்சுருக்கேன்."




தெரிந்த முகம்!?!?

சர்தார்ஜி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த "முகம்" நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது

சர்தார்ஜி 2 (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான்.



கிளாஸ்!

ஆசிரியர் : கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி சார்.

ஆசிரியர் : நான் தூங்கிட்டு இருந்தா கூடப் பரவாயில்லை எழுப்பிச் சொல்லு.



அரசியல்வாதிகளின் பொய்

ஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’


No comments: