Tuesday, July 17, 2007

கறிவேப்பிலைக் குழம்பு - II

தேவையான பொருட்கள் :

உதிர்த்த இளம் கறிவேப்பிலை - 1 கப்
சிவப்பு மிளகாய் - 7
உளுத்தம் பருப்பு - 11/2 மேஜைக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1/2 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் - வறுக்க, தாளிக்க தேவையான அளவு

தாளிக்க :

கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - சிறிதளவு

செய்முறை :

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி
சிவப்பு மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

கழுவிய கறிவேப்பிலை சேர்த்து ஒரு தடவை வதக்கி உடனே
அடுப்பிலிருந்து இறக்கவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.

வறுத்த பொருட்களுடன் ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை
சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,
உளுத்தம் பருப்பு பிறகு வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

அரைத்த விழுதை இதில் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியான குழம்பு பதத்திற்கு
கொதிக்க வைக்கவும்.

இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடனும் பரிமாறலாம்.

No comments: