திங்கள், 2 ஜூலை 2007( 17:35 IST ) Webdunia
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 3 விழுக்காடு வளர்ச்சி பெற்று 39.6 பில்லியன் டாலர் பில்லியன் வருவாய் ஈட்டி சாதனைபடைத்துள்ளது.
2006 - 07 ஆம் நிதியாண்டில் இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை 24 விழுக்காடில் இருந்து 27 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என நாஸ்காம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்த இலக்கை விட 3 விழுக்காடு வளர்ச்சி அடைந்து 30.7 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாக நாஸ்காம் தலைவர் கிரன் கார்னிக் தெரிவித்தார். இது கடந்த ஆண்டு வருவாயை விட 9.3 பில்லியன் டாலர்கள் அதிகமாகும்.
ஒவ்வொரு நிதியாண்டிலும் தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்து வருவதால், வரும் நிதியாண்டில் 50 விழுக்காடு வளர்ச்சியை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2005 -06 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி 23.6 விழுக்காடாக இருந்த மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி வளர்ச்சியானது, 2006 - 07 ஆம் நிதியாண்டில் 33 விழுக்காடாக வளர்ர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
உள்நாட்டு மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 6.7 பில்லயன் டாலரிலிருந்து, 2006 - 07 ஆம் நிதியாண்டில் 8.2 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருப்பதாகவும், பொறியியல் மற்றும் தயாரிப்பு துறைகளின் ஏற்றுமதி 23 விழுக்காடு அதிகரித்து, 4.9 பில்லியன் டாலர் வருவாயை எட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tuesday, July 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment