Sunday, July 1, 2007

கூகுளின் இணைய நூலக வசதிக்கு எதிர்ப்பு

பல்கலைக் கழகங்களின் நூலகங்களில் உள்ள நூல்கள் அனைத்தையும் இணையத்தில் பதிப்பிக்கும் கூகுள் நிறுவனத்தின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வலுக்கிறது. கூகுளின் இந்த முயற்சியால் தாங்கள் ஏராளமான பொருளிழப்புக்கு உள்ளாகியிருப்பதாக அமெரிக்க பதிப்பகங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

கூகுள் நிறுவனம் காப்புரிமைச் சட்டங்களை அப்பட்டமாக மீறி வருகிறது என்று குற்றம் சாட்டும் இந்த அமைப்பு, இதனால் வெளியீட்டாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக கூகுள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மிகப் பெரிய 4 பல்கலைக் கழக நூலகங்களுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 மில்லியன் வால்யூம் அளவிலான பக்கங்களை இணையத்தில் பதிப்பிக்கும் இமாலய முயற்சியில் இறங்கியுள்ள கூகுள் நிறுவனம் அதற்கென 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

ஸ்டேன்ஃபோர்ட், மிச்சிகன், ஹார்வர்ட் பல்கலைக் கழகங்கள் மற்றும் நியூயார்க் பொது நூலகம் என அமெரிக்காவின் 4 முன்னணி நூலகங்களுடனான இந்த திட்டம் 2015-ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: