அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்றுமதியின் வாயிலாகக் கிடைத்து வந்த லாபம் பெரிதும் குறைந்துள்ளது!
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அலுவலர் எஸ். கோபாலகிஷ்ணன், டிசம்பரில் இருந்து இதுவரை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 9 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளது என்றும், இதனால் மென்பொருள் உள்ளிட்ட ஐ.டி. சேவை நிறுவனங்களின் லாபம் பெருமளவிற்கு குறைந்துள்ளதாகக் கூறினார்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் எந்த நாட்டுடன் வணிகத்தைச் செய்வது என்பதைப் பொறுத்து வருவாயும், லாபமும் நிர்ணயமாகிறது என்று கூறிய கோபாலகிருஷ்ணன், ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்பட்டு வரும் தாக்கத்தைக் குறைக்க எங்கு எப்படிப்பட்ட வணிகத்தைச் செய்ய வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் துல்லியமாக ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். (பி.டி.ஐ.)
Sunday, July 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment