Sunday, June 24, 2007

அட்லாண்டிஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியத

அட்லாண்டிஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது Webdunia

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அட்லாண்டிஸ் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.19 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. கலிபோனியா மாநிலம் மொஜாவ் பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை விமான தளத்தில் அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்கியது.

இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு அட்லாண்டிஸ் விண்கலம் வியாழக் கிழமை தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அட்லாண்டிஸ் தரையிறங்க வேண்டிய கென்னடி விண்வெளி நிலையம் அமைந்துள்ள பகுதியில், நிலவிய மோசமான வானிலை காரணமாக இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவெரல் இடத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் விண்கலம் தரையிறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், அங்கு நிலவிய வானிலையும் மோசமாக இருந்ததால், அட்லாண்டிஸ் தரையிறங்குவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத்திலுள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை விமானத் தளத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

விண்வெளியில் நீண்ட நாள் தங்கியிருந்தவர் என்ற உலக சாதனையை படைத்துள்ள சுனிதா வில்லியம்ஸ் 195 நட்களுக்குப் பிறகு பூமி திரும்பி உள்ளார். தரையிறங்கிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களும் 45 நாட்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

No comments: