Thursday, June 21, 2007

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு! செவ்வாய், 12 ஜூன் 2007( 16:56 IST )
Webdunia

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.40.65/66 ஆக உயர்ந்துள்ளது!

நேற்றைய வணிகத்தின் முடிவில் ரூ.40.79/80 ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, அந்நிய மூலதன வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்றைய வணிகத்தில் 14 காசுகள் உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான ரூபாயின் மதிப்பு, 9 ஆண்டு காலத்தில் காணாத அளவிற்கு 40.28 ஆக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு சரியவிடாமல் தடுக்க இந்திய மைய வங்கி ஏப்ரல் மாதத்தில் மட்டும் 206 கோடி டாலர்களை வாங்கியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யு.என்.ஐ.)

No comments: