Sunday, June 24, 2007

தேனீ




தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.

வரலாற்றில் தொல்லுயிர்ப் எச்சங்களில் தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகத் தெரிகின்றது. இத்தொல்லுயிர் எச்சங்கள் ஐரோப்பாவில் கிடைத்திருந்தாலும், தேனீக்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மாந்தர்கள் கி.மு 4000 ஆண்டுகளிலேயே தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்தார்கள் என்றும் கி.மு.1500-2000 என்றும் பல்வேறு கணிப்புகள் உள்ளன.

தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று பூந்துகள் சேகரிப்பதால், பூக்களிடையே சூலுற (கருவுற) உதவுகின்றது. இதனால் மரஞ்செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குகின்றன. இதனை பூந்துகள் சேர்க்கை (மகரந்தச் சேர்க்கை) என்பர். உலகில் தேனீக்களால் நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) [4], கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் [5]

தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளை குமுக பூச்சியினம் என்பர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீதான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவைதவிர பணிசெய் பெண் தேனீக்கள் 50,000-60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுபடுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.


தேனீயின் வகைகள்
மலைத்தேனீ - ஏபிஸ் டோர்சாட்டா (Epis Dorsata) எனப்படும் இத்தேனீக்கள் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் மலைகளிலும் காடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.
கொம்புத்தேனீ - ஏபிஸ் ஃபுளோரியா (Apis Florea) எனப்படும் இவையும் அசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை மிகவும் சிறியதாக இருக்கும்.
அடுக்குத்தேனீ - ஏபிஸ் இண்டிகா (Apis Indica) எனப்படும் இவ்வகைத் தேனீக்கள் இந்திய உபகண்ட நாடுகளில் பொதுவாகக் காணப்படும்.
கொசுத்தேனீ - ஏபிஸ் மெலிபோனா (Apis Melipona) எனப்படும் இவை அளவில் மிக மிகச் சிறியவை.
மேலைத்தேயத் தேனீக்கள் - இவை ஏபிஸ் மெலிஃபேரா (Apis mellifera) எனப்படும். ஆபிரிக்காவில் தோன்றிய இத்தேனீக்கள் பின்னர் வடக்கு ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவின.
கீழைத்தேய தேனீக்கள் (Apis cerana, அல்லது Asiatic honey bee அல்லது Eastern honey bee).

உடலமைப்பு

தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுபடுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.

மருத்துவ குணங்கள்

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது. (குறிப்புகள் தேவை)
உடல் பருமனாக: குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்
உடல் பருமனைக் குறைக்க: மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.
வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளி, இருமல் போன்றவை நீங்கும்.

No comments: