Thursday, June 21, 2007

மும்பைக் குறியீடு 14,500-ஐ தொட்டது

மும்பைக் குறியீடு 14,500-ஐ தொட்டது. வியாழன், 21 ஜூன் 2007( 12:55 IST )
Webdunia

உலோகம், வாகனம் உள்ளிட்ட அதிக விலை பங்குகளுக்கு ஏற்பட்ட வரவேற்பால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 100 புள்ளிகள் உயர்ந்து 14,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக ஏற்ற - இறக்கத்துடன் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியப் பங்குச் சந்தையில் இந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.

30 பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச் சந்தை குறியீடு இன்று காலை ஒரு மணி நேர வர்த்தகத்தில் 101.45 புள்ளிகள் உயர்ந்து 14,513.40 புள்ளிகளாக அதிகரித்தது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 20 புள்ளிகள் உயர்ந்து 4,269 புள்ளிகளை தொட்டது.

சர்வதேச சந்தைகளிலும், ஆசிய சந்தைகளிலும் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் உயர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
(பி.டி.ஐ.)

No comments: