Sunday, August 5, 2007

மனித வாழ்வுக்கு : அயோடின் உப்பின் அவசியம

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், மூளையின் இயல்பான செயல் பாட்டிற்கும் அயோடின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவனின் உடலில் அயோடின் உப்பு அதிகரித்தாலும், குறைந்தாலும் அவன் அவதிப்பட போவது உறுதி. உப்பில்லாத பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள் அது ருசிக்காக மட்டுமல்ல நாம் சாப்பிடும் ஒவ்வொறு உணவுப் பண்டத்திலும் அயோடின் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காவே.

எத்தனையோ உணவுப் பொருட்கள் இருக்க சாதாரண உப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்று கேட்கிறீர்களா? உலகின் எந்த மூளையில் பிறந்த மனிதனும் அவன் சாப்பிடும் உணவில் உப்பை சேர்த்து தான் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் குறைந்தது 10 கிராம் என்ற அளவில் உப்பு இருந்தால் அது சிறந்த ஊடகமாக கருதப்படுகிறது.

அயோடின் குறைபாடானது வயதானவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவுகள் அயோடின் சத்துள்ள கூட்டுப் பொருள் கலந்து தயாரிப்பதே அயோடைஸ்ட் உப்பாகும்.இதனை சமையலின் போதும், நேரடியாக உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்.

நாள் ஒன்றுக்கு நாம் உண்ணும் உணவில் அதிகபட்சமாக 3 முதல் 6 மடங்கு அயோடின் உப்பு சேர்த்தாலும் அது சிறு நீர் வலியாக வெளியேறி விடுகிறது. ஒவ்வாமை, அலர்ஜி போன்றவற்றில் இருந்து விடுபட அயோடின் உப்பு அவசியமாகும். அயோடின் குறைபாடு இல்லாதவர்களும் அயோடின் உப்பை சேர்த்துக் கொள்வது நல்லது.

No comments: