Sunday, August 5, 2007

கண்கள் சோர்வடைவதைப் போக்க 'தேன்' வைத்தியம்!


அன்றாட வாழ்வில் கம்யூட்டர் என்பது அடிப்படை ஒன்றாகிவிட்டது. நகர்புறங்களில் பணிக்குப் போகும் பலரும் பணிபுரிவது கம்யூட்டரின் முன்னால்தான்.

இவ்வாறு எட்டிலிருந்து ஒன்பது மணி நேரமும் கம்ப்யூட்டர் திரையை வெறித்துக் கொண்டே காலத்தை நகர்த்தும் சூழலால், முதலில் பாதிக்கப்படுவது கண்கள்.

கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, தூக்கமின்மையால் வாடுபவர்களுக்கும் கண்களில் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.

நகர்மயமான சூழலில் வாழ்ந்தாலும், எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களால் நம் உடல் நலனைப் பேணலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கண்கள் சோர்வடைவதைப் போக்கிக் கொள்ளவும் இயற்கை முறையில் எளிதில் வைத்தியம் செய்து கொள்ளலாம்.

செய்ய வேண்டிவை

தேனையும் உருளைக்கிழங்கையும் அரைத் தேக்கரண்டி அளவில் பிழிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பஞ்சினைத் தொட்டு கண்களின் மேல் வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்துவந்தால், கண்கள் சோர்வில் இருந்து விடுபடுவதுடன் பளிச்சென்று இருக்கும்.

No comments: