
பலருக்கு பற்களில் காவி நிறத்தில் கறையேறிபோய் இருக்கும். எத்தனை பற்பசைகளை பயன் படுத்தினாலும் கறை போகாது. இதை நீக்க ஒரு எளிய வழி.
கடுக்காய் தோல், தான்தோன்றி காய், நெல்லிக்காய் ஆகியவற்றை சமஅளவில் எடுக்கவும். இவற்றை வெயிலில் காயவைத்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
இதை பற்பொடியாக பயன்படுத்தி, தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல் துலக்கி வரவும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால், கறை நீங்கி பற்கள் மின்னலடிக்கும்.
No comments:
Post a Comment