பிள்ளைகளுக்கு பிடித்தமான இட்லி சாம்பார் வைத்துப் பார்க்கலாமா?
மிளகாய், தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1\2 தேக்கரண்டி
சீரகம் - 1\2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
பெருங்காயம்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி சிவக்கும் வரை பொரித்துக் கொள்ளவும்.
இது எல்லாவற்றையும் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்.
பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும். அதில் புளி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு, மசாலாவைப் போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பருப்பை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இட்லியுடன் பரிமாறவும்.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment