இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கான மென்பொருள் ஒன்றை இர்வினில் உள்ள கலிபோஃர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அண்மைக் காலமாக வணிகத்துறையில் மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை உருவாக்கி வந்த இணையதள குற்றவியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இது உதவும் என்று கூறப்படுகிறது.
நிறுவனங்களில் உள்ள ஊழியர்களிடையே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறியவும், தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டே பிற நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்ப்பவர்களைக் கண்டுபிடிக்கவும், ரகசியமான, முக்கியமான ஆவணங்கலைத் திருடுபவர்களைக் கண்டறியவும் இந்த மென்பொருள் உதவும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
வணிகத்துறையில் பெருமளவு இழப்பீடுகளை உண்டாக்கும் குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு குற்றங்கள் தொடர்புடைய நிறுவனங்களில் ஊழியர்கள் இணையதளத்தின் மூலமாகவே மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளதுதான், இந்த மென்பொருள் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுவதற்கு தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் நம்பிக்கையான ஊழியர்கள், தனி மனிதர்களின் ஆவண, தகவல் திருட்டு நடவடிக்கைகளும், அந்நிறுவனங்களின் கணினி செயல்பாடுகளை செயல்படவிடாமல் தடுக்கும் திறனும்தான் என்று ஒகாயோ விமானப்படை தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த கில்பர்ட் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயும், வெளியில் பிறருக்கும் அனுப்பும் ஈ-மெயில்களில் ஏதேனும் தகவல்கள் உள்ளனவா என்பதை தனியாக தாம் கண்டுபிடித்துள்ள மென்பொருள் மூலமாக தகவல்களைத் திரட்டியதாக அவர் கூறினார். முக்கியமான பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசும் ஊழியர்களைக் இந்த மென்பொருள் இனங்கண்டறியும் திறன் கொண்டது.
மேலும் அது அவ்வாறு பேசுபவர்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்கள், இரகசியமாக பேசுபவர்கள் எனத் தரம் பிரிக்கும் தன்மையும் கொண்டுள்ளது என்று கில்பர்ட் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேற்கண்ட இரண்டு வகையான பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும் நிறுவனங்களை பொறுத்த வகையில் ஆபத்தானவர்களே என்றும் அவர் கூறியுள்ளார்.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment