தேவையானவை
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.பருப்பு - 1/2 ஆழாக்கு
க.பருப்பு - 1/2 ஆழாக்கு
அரிசி - 1 ஆழாக்கு
இவற்றை இரவே ஊற வைத்து காலையில் அரைக்கவும்.

அரைக்கும்போது மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கட் பண்ணிய கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கலவையை தோசை மாதிரி சுட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment