Friday, April 4, 2008

தமிழ் திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது

கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுகினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் முன்னணி நடிகர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் சத்யராஜ், முரளி, சந்திரசேகர், சரத்குமார், டி.. ராஜேந்தர், ராதாரவி, விஜயகுமார் மற்றும் நடிகைகளள் ராதிகா, விந்தியா, மனோரமா மஞ்சுளா, சத்யபிரியா உட்பட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், காலை 8 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக நிர்வாகிகள் அமர்வதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய கே.ஆர்.ஜி., இருமாநிலத்தவர்களும் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும் என கூறினார். தமிழர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கர்நாடகாவிற்கு எச்சரித்தர்

இந்த விஷயத்தை ஊதி பெரிசாக்க சன்.நியூஸ் முடிவு செய்துள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நடிகர் சீமானை பேட்டி எடுக்கிறார்கள். நடுவில் நடிகர்கள், நடிகைகள் பேட்டி என்று பரபரப்பாக இருக்கிறது.

டி.. ராஜேந்தர் - நாங்க இப்ப தான் இடிக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அடித்தால் நீங்கள் ( கன்னட மக்கள் ) தாங்க மாட்டீர்கள்.

பார்த்திபன் - இது வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உண்ணாவிரதம் என்றார்.

பேசுபவர்கள்: எங்கள் படை திரண்டால் கர்நாடகம் தாங்காது என்று தவறாமல் சொல்லுகிறார்கள்.

ரஜினி வந்தார்
உண்ணாவிரத மேடைக்கு ரஜினிகாந்த் வந்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். முதல் வரிசையில் அமர்ந்த ரஜினி அவருக்கே உரிய ஸ்டைலில் கன்னத்தில் விரல் வைத்தபடி அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

No comments: